சென்னை,
டைபெற இருக்கும் தமிழ்நாடு இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மேலும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உடல்நலக்குறைவால் மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கும் சேர்த்து 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
dmk
தேர்தல் அட்டவணை
அக்டோபர் 26 வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்
நவம்பர் 2 வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்
நவம்பர் 3 வேட்பு மனுக்கள் பரிசீலனை
நவம்பர் 5 வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்
நவம்பர் 19 வாக்குப்பதிவு
நவம்பர் 22 வாக்கு எண்ணிக்கை
தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.
மக்கள் நலக்கூட்டணி இந்த தேர்தல் போட்டியிடாது என வைகோ அறிவித்து உள்ளார்.
தமிழ் மாநில காங்கிரசும் போட்டியிடவில்லை என்று ஜி.கே.வாசனும் அறிவித்து உள்ளார்.
எப்போதும், முதலில் வேட்பாளர் அறிவிப்பை வெளியிடும் அதிமுகவோ, முதல்வர் மருத்துவமனையில் உள்ளதால் செய்வதறியாது திகைத்து உள்ளது.
ஆனால், திமுகவோ பரபரப்பாக தேர்தல் வேலையில் இறங்கி உள்ளது. இதுகுறித்து
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
வருகிற 19.11.2016அன்று நடைபெறவுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில்,போட்டியிட விரும்புகின்றவர்கள் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து  20-10-2016வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்குள்,அண்ணா அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேட்பாளர் நேர்காணல் 21-10-2016அன்று சென்னை,அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறும்.
வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம்  – ரூ. 25,000/-
விண்ணப்ப படிவம் தலைமைக் கழகத்தில் ரூ. 1,000/-வீதம்செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்/
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.