புதுடெல்லி:
5 மாநில தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராஅறிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 18.34 கோடி வாக்காளர்கள் உள்ளனர் . மாநிலங்களில் மொத்தம் 690 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. 5 மாநிலங்களில் 8.55 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். 5 மாநில தேர்தலில் வாக்களிக்க உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன. உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், உத்திரப்பிரதேசத்தில் ஜனவரி 14ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் என்றும் பிப்ரவரி 10ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், உத்தரபிரதேசத்திற்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது என்றும், மணிப்பூருக்கு 2 மற்றும் பஞ்சாப் கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது என்றும்,  உத்தரகண்ட் மற்றும் கோவாவுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

முதல் கட்டம் வாக்குபதிவு பிப்ரவரி 10யும்,  பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 14ம் தேதியும், மூன்றாம் வாக்குபதிவு பிப்ரவரி 20 தேதியும், நான்காம் கட்ட வாக்குபதிவு பிப்ரவரி 23 ம் தேதியும், மணிப்பூரில் 5ம் கட்ட வாக்குபதிவு பிப்ரவரி 27ம் தேதியும், மணிப்பூரில் ஆறாம் கட்ட வாக்குபதிவு மார்ச் 3 ம் தேதியும், இதை தொடர்ந்து ஏழாம் கட்ட வாக்குபதிவும் நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார்.