டெல்லி: உ.பி. உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை தேர்தல் கமிஷன் தேர்தல் தேதிகளை அறிவிப்புக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப். உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இந்த ஆண்டு (2022ம் ஆண்டு)  மார்ச், ஏப்ரல் மாதங்களில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில்  சட்டமன்ற  தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இன்று மாலை 3.30 மணி அளவில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை வெளியிடும் என்று கூறப்படுகிறது.