புதுடெல்லி:
5 மாநில தேர்தல்: பிரச்சாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராஅறிவித்தார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 15-ஆம் தேதி வரை பிரச்சரா பொதுக்கூட்டங்கள், ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புகளை டிஜிடல் காணொளி வாயிலாக மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.