புது டெல்லி :
தேர்தல் தொடர்பாக புகார்களை இ- விஜில் (cVIGIL) என்ற செயலியில் அளிக்கலாம் என்றுதலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், கொரோனா, ஒமிக்ரான் பரவும் சூழலில், கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இ- விஜில் என்ற செயலியில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக புகார்களை அளிக்கலாம் என்றும், உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங்களில் வேட்பாளர்கள் தலா 40 லட்சம் வரை செலவிட அனுமதி வழங்கப்படுகிறது. கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வேட்பாளர் தலா 28 லட்சம் வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.