மதுரை : கண்டெயினர் லாரியில் இருந்து 6 பெட்டி நகைகள் பறிமுதல்

துரை

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் கண்டெயினர் லாரியில் ஆறு பெட்டிகள் நிறைய நகைகள் கிடைத்துள்ளன.

மாதிரி புகைப்படம்

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் மாநிலம் எங்கும் நடந்து வருகின்றன. இந்த சோதனையில் ஆங்காங்கே ரொக்கப் பணம் பிடிபட்டு வருகின்றன.

இன்று மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு கண்டெயினர் லாரி சென்றுக் கொண்டு இருந்தது. வழியில் மதுரை மேலூர் சித்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்த கண்டெயினர் லாரியில் 6 பேடிகளில் இருந்து ஏராளமான நகைகள் கிடைத்துள்ளன.

லாரியில் வந்தவர்கள் இந்த நகைகள் தங்கம் அல்ல கவரிங் என கூறி உள்ளனர். ஆகவே பறக்கும் ப்டையினர் தங்கமா அல்லது கவரிங்கா என ஒவ்வொரு நகையாக மதிப்பீட்டாளரைக் கொண்டு ஆய்வு செய்ய உள்ளனர். ஆனால் இந்த நகைகளுக்கான ஆவணங்கள் ஏதும் உடன் எடுத்துச் செல்லப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 6 box jewels, Container lorry, Election squad
-=-