தேவகோட்டை: “எனது அலுவலகத்தில் பறிமுதல் செய்த பணம் என்னுடையது அல்ல”  என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்  மறுப்பு தெரிவித்து உள்ளார்.

பட்டுவாடா புகாரின் பேரில், காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் உள்ள  காங்கிரஸ்  எம்பி கார்த்தி சிதம்பரத்தின்  அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணம்  திடீர் சோதனை நடத்தினார். அப்போது அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள கொட்டகையில் ஒரு பையில் வைத்திருந்த  ரூ.13.45 லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது, கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளிடம் இருந்து அந்த பணத்தை பறித்துக்கொண்டு ஓடினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து,  காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில்  செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம்,   அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவை பாஜக அரசின் கைப்பாவைகளாக உள்ளன. அவர்கள் எதிர்க்கட்சியினர் வீடுகளில் உள்நோக்கத்தோடு சோதனையிடுகின்றனர். எனது அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் என்னுடையது அல்ல.

தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவராகவும், வேட்பாளராகவும் இருக்கும் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அவரை ராகுல் காந்தியுடன் பிரச்சாரத்துக்கு போக விடாமல் உள் நோக்கத்தோடு தடுத்துள்ளனர்.

இவ்வாறு கூறினார்.

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறித்துச்சென்ற கட்சியினர்…..

[youtube-feed feed=1]