சென்னை: தேர்தல் ஆணையத்தால், கட்சிகளின் அங்கீகாரம் பதிவு நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் , தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னையர்நீதிமன்றம்,இந்த வழக்கு மீண்டும் மார்ச் மாதம் விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் விதிகளின்படி, 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அதன்படி, தேர்தலில் போட்டியிடாத, தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாமல் மக்களை ஏமாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட 42 கட்சிகள் அடங்கும்.

இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மனிதநேய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கட்சிகளின் பதிவுகளை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சட்டம் அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. தேர்தல் ஆணையம் இந்த முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை என்றும் தெரிவித்தது.
மேலும், இதவரை நடந்து முடிந்த தேர்தல்களில் இந்த கட்சிகள் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில், நீக்கம் செய்யப்பட்ட கட்சிகள் தொடர்ந்து 6ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை. வரவு – செலவு கணக்குகளையும் தாக்கல் செய்ய வில்லை என்பதால் நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதிகள் இன்று (பிப்ரவரி 18) தீர்ப்பை வழங்கினர். அதில், கட்சிகள் நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை இடைக்காலமாக ரத்து செய்யமுடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், பதிவு நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கானது மார்ச் மாதம் விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 42 துக்கடா கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம்…
[youtube-feed feed=1]