டில்லி:

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்த பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள், நாட்டின் ராணுவத்தை மோடியின் ராணுவம் போன்றே தேர்தல் விதி மீறி பேசி வந்த நிலையில், தற்போது அவரின்  கேதர்நாத் பயணமும் தேர்தல் விதிமீறி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் மோடி மீதான பயம் காரணமாக, அவரிடம் சரண் அடைந்துள்ளது என்று ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,  நாட்டின் தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு தேர்தல் அட்டவணை கையாள்வ தில் இருந்து தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் வரை பல்வேறு மோசடிகளை செய்து வரும் பாஜக,  நமோ டிவி, நாட்டின் ராணுவத்தயே மோடியின் ராணுவம் போன்று தேர்தல் பிரசாரத்தில் பேசி வந்த நிலையில், தற்போது  மோடியின் கேதர்நாத் நாடகமும் அரங்கேறி  உள்ளது.

மோடி மற்றும் அவரது கும்பல் முன் தேர்தல் கமிஷனின் சரணடைந்துள்ளது. இது அனைத்து இந்தியர்களுக்கும் வெளிப்படையாகவே தெரியும். தேர்தல் ஆணையம் மோடிக்கு பயப்படுவதற் கும் , மரியாதை செய்வதற்கு மட்டுமே  பயன்படுத்தப்படுகிறது. ,இனிமேல் ஒன்றுமில்லை.

இவ்வாறு ராகுல் டிவிட்டில் கூறி உள்ளார்.

“பிரதமர் மோடி பத்ரிநாத்துக்கும், கேதார்நாத்துக்கும் அலுவல் ரீதியிலான பயணம் மேற்கொண் டுள்ளார். ஆனால், அவருடைய தனிப்பட்ட விஷயங்கள் அனைத்து ஊடகங்களிலும் தொடர்ச்சி யாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும் என்று காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் திரிணமூல் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.