சென்னை:

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் வரும் 18ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையர்கள் நேற்று முதல், சென்னையில், தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

நேற்று முதல் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை  சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணை யர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா, திரேந்திர ஓஜா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது,

தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி னோம். மேலும் காவல்துரை அதிகாரிகளி,, வருமான வரி மற்றும் தேர்தல் அதிகாரிகளை சந்தித்தோம் என்று தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து பேசிய  தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, தமிழகத்தில் நடைபெற்று வரும் பணப்பட்டுவாடா விவகாரத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் பல அரசியல் கட்சிகள் வற்புறுத்தி இருப்பதாகவும்,  தேர்தல் பறக்கும் படையினர் பொதுமக்களை இடையூறு செய்ய கூடாது எனவும் வலியுறுத்தினர் என்று கூறினார்.

மேலும்,  அரசியல் கட்சிகள் கூட சி.சி.டி.வி.களை சாவடிகளுக்குள் மட்டுமல்ல, வாக்குப்பதிவு நிலையங்களுக்கு வெளியேயும் அமைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளன. அதுபோல, காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைந்து இடைத்தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுடளளது.  இதுகுறித்து  பரிசீலிக்கப்படும் என்றார்.

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி மற்றும் , தண்ணீர் வசதி, வெயிலுக்காக ஷாமியானா  போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியவர்,  பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு தர உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, அதிகார  துஷ்பிரயோகம்  குறித்து தேர்தல் அலுவலர்க ளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுஉள்ளது. அவர்கள் தீவிரமா பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தவர், தமிழகத்தில் 19,655 ஆயுதங்கள் மாவட்ட அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தலின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற வாய்ப்பில்லை என்றவர்,  இதுவரை 8787 நபர்கள் (சமூக விரோத சக்திகள்)  கட்டுப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் கூறினார்.

அத்துடன், தேர்தல் ஆணையம் விரைவில்  விரைவில்  புகைப்பட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

நேற்று முன்தினம் இரவு (2ந்தேதி) சென்னை வந்த தேர்தல்  ஆணையர்கள், நேற்று  அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இன்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா ளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன் உள்பட  உயர் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, நாட்டிலேயே தமிழகத்தில்தான்  அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.