டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையின ரின் அதிரடி நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் இதுவரை   377 கோடி ரூபாய் ரொக்கமும், 312 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது.

தமிழகத்தில்தான் நாட்டிலேயே  அதிக அளவாக 127 கோடி ரூபாய் பணமும், 135 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், ஏப்ரல் 3ஆம் தேதி  (நேற்று) நிலவரப் படி, நாடு முழுவதும், பறக்கும் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்து பட்டியலிட்டு உள்ளது. அதன்படி

ரொக்கப் பணம் ரூ. 377 கோடி 

மதுபானங்கள் மதிப்பு ரூ. 157 கோடி

போதைப்பொருட்கள் மதிப்பு ரூ. 705 கோடி

தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மதிப்பு ரூ. 312 கோடி

அதுபோல மாநில வாரியாக பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் தெரிவித்து உள்ளது.

அதில், அதிகபட்சமாக  தமிழகத்தில் 127.84 கோடி ரூபாய் சிக்கியுள்ளது என்றும், அத்துடன் . 135.6 கோடி ரூபாய் மதிப்பிலான, 884 கிலோ அளவுக்கு தங்கம், வெள்ளி, ரூ. 26 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், ரூ. 26 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று  தெரிவித்துள்ளது.

அத்துடன் 6.19 கோடி ரூபாய் மதிப்பிலான பொருங்கள் வாக்காளர்களுக்கு கொண்டு  இலவசமாக கொடுப்பதற்காக கொண்டுசெல்லப்பட்டவையும் பறிமுதல் செய்யப்பபட்டு இருப்பதாக கோடிட்டு காட்டி உள்ளது.

இதையடுத்து, 2வது இடத்தில் ஆந்திர மாநிலம் திகழ்கிறது. அங்கு  95.79 கோடி ரூபாய் ரொக்க பணமும், 30.48 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 24.11 கோடி ரூபாய் பணமும், 35.21 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும், 22.7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களும், 60.29 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், போன்ற சிறிய மாநிலங்களில் 10 லட்சம், 20 லட்சம் என்ற அளவுக்கு பணம் பிடிபட்டுள்ளது.

லட்சத்தீவு, மிசோரம் போன்ற பகுதிகளில் எந்தவித முறைகேடுகளோ, பணம், பொருட்கள் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் எதில் முதல் முதலிடத்தை பிடிக்கிறதோ இல்லையோ, இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள், முறைகேடு போன்றவற்றில் முதலிடத்தை பிடித்து, தமிழக மக்களின் மானத்தை காற்றில் பறக்கவிடுகிறது…