சென்னை:

லைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகத்தில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஏப்ரல்  2-ம் தேதி சென்னை வர இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு கூறினார்.

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சிகளும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், மற்றொரு புறம் தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி காட்டி, ஏராளமான பணம், நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் வரும் 2-ம் தேதி சென்னை வர உள்ளனர்.

ஏப்ரல் 2ம் தேதிவரை சென்னையில் தங்கியிருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை சென்னைக்கு அழைத்து அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதுதவிர, அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு ஆலோசனை நடத்த உள்ளது.