டில்லி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு டி.டி.வி. தினகரன் அனுப்பிய பதிலை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

திவாகரன்

சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் வி.கே.சசிகலா. கட்சி விதிப்படி அவர் பொதுச்செயலாளர் ஆக முடியாது என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி., தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தார். இது குறித்து, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கான பதிலை அ.தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அனுப்பினார். அவரது பதிலை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
“டி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எந்தவித தகவலும் வரவில்லை. ஆகவே தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. பொறுப்பாளர் இல்லை. தவிர, தேர்தல் ஆணையத்துக்கு சசிகலாதான் பதில் அளிக்கவேண்டும். அல்லது அவர் சார்பாக வேறு யாராவது பதில் அளிப்பார்கள் என்றால் அது குறித்து சசிகலா தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். இது குறித்து வரும் 10ம் தேதிக்குள் சசிகலா பதில் அளிக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் பொறுப்பேற்றதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று தகவல் பரவியது. ஆனால் இது குறித்து தேர்தல் ஆணையம் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதே உண்மை.