சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து  இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று தமிழகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளனர்.  இதற்காக டெல்லியில் இருந்து அதிகாரிகள் குழு இன்று சென்னை வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கொரோனா முன்னேற்பாடுகளுடன் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கனேவே வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதுடன், ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தீர்மானித்துள்ளது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வாக்கு பதிவு இயந்திரங்களை வரவழைத்து பாதுகாப்பாக வைத்து வருகிறது. தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று சென்னை வருகிறது. பகல் 12 மணியளவில் கிண்டியில் உள்ள தனியார் விடுதியில், தமிழக தேர்தல் ஆணையர் மற்றும், அரசியல் கட்சிகளுடன் இக்குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா அல்லது 2 கட்டமாக நடத்துவதா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.