சென்னை:  தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 80வயதுக்கு மேற்பட்டோர் உள்பட அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் வாக்களிக்கும் வகையில், இந்திய தேர்தல் கமிஷன் அரசாணை வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும், இதுவரை, அரசாங்க ஊழியர்கள், காவல்துறை ஊழியர்கள் மற்றும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பாதுகாப்புப் படையினர் மட்டுமே அஞ்சல் வாக்குகளுக்கு அனுமதிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு அமல்படுத்திய புதிய நடைமுறையின்படி,   80வயதுக்கு மேற்பட்டோர், வாக்குச்சாவடி வர முடியாத முதியோர்கள், எளிதில் தொடர்பு கொள்ள முடியாத பகுதிகளில் பணியாற்றுபவர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், ராணுவத்தினர், காவல்துறையினர், மாற்றுத்திறனாளிகள், உள்பட அத்தியாவசிய பணிகளில் உள்ளவர்கள்,ரயிலை இயக்கும் லோகோ பைலட், கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள், பத்திரிகையாளர்கள்  தேர்தலுக்கு முன்னதாகவே, தபால் வாக்குக்கான  வாக்குச்சீட்டினை பெற்று, அதில் தங்கள் ஓட்டினை பதிவு செய்யலாம் என்றும் அதற்கான படிவம்  12டி-ஐ பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நடைமுறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது ஆட்சியாளர்கள் முறைகேடு செய்ய வழிவகுக்கும் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தபால் வாக்குகள் தொடர்பான அரசாணையை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.