டில்லி:

அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டிருப்பதை இன்னும் அங்கீகரிக்க வில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

சென்னையில் இன்று (ஆக., 10 ) முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நியமனம் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன் தகவல்அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சசிகலா பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை தாங்கள் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்றும் அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்னை தொடர்ந்து நிலவுவதால் இருப்பதால் பொதுச் செயலாளர் பற்றி இதுவரை தீர்மானிக்க வில்லை என்றும் பதில் அளித்துள்ளது.