சென்னை:
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அழைப்புக் கடிதம் வந்துள்ளது என ஜெ.தீபா தெரிவித்தார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். போயஸ் கார்டன் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளேன்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக வரும் 6ம் தேதி நடைபெறும் இறுதி விசாரணையில் பங்கேற்க எனக்கு தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளது. அன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel