
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு எப்படி வைக்கப்பட்டிருந்ததோ அதேபோன்ற சவப்பெட்டியுடன் கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கி அதை பிரசார ஜீப்பின் முன்னால் வைத்துக்கொண்டு ஆர்.கே. நகரில் வாக்கு கேட்டது ஓ.பி.எஸ். அணி.
இதற்கு தினகரன் அணி எதிர்ப்பு தெரிவித்ததோடு, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தது.
இதையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள், இது போன்று பிரச்சாரம் செய்யக்கூடாது என தடை விதித்தனர். சவப்பெட்டி மாடலில் தேசியக்கொடியை போர்த்தியிருந்ததை தேர்தல் ஆணைய அதிகாரிகள் எதிர்த்துள்ளனர்.
இதையடுத்து சவப்பெட்டி பிரச்சாரத்தை ஓ.பி.எஸ். அணி ரத்து செய்தது.
Patrikai.com official YouTube Channel