டில்லி

லைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் தங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை விட்டுக் கொடுத்துள்ளனர்.

கடந்த 14 ஆம் தேதியுடன் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்து வந்த சுசில் சந்திராவின் பதவிக் காலம் முடிந்தது.  இதையொட்டி கடந்த 15 ஆம் தேதி புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் கடந்த 15ம் தேதி பொறுப்பேற்றார்.

தேர்தல் ஆணைய சட்டத்தின் படி தலைமைத் தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்களுக்கு ஊதிய சலுகைகள், வருமான வரி விலக்கு, இதர சலுகைகள் அளிக்கப்படுகின்றன. மேலும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.34 ஆயிரம் வழங்கப்படுகிறது.

நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் ஏசி.பாண்டேவுடன் சேர்ந்து, தேர்தல் ஆணையத்தின் முதல் கூட்டத்தை கூட்டினார்.  கூட்டத்தில் சிக்கன நடவடிக்கையாக அரசு தங்களுக்கு அளித்து வரும் கூடுதல் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக இருவரும் தெரிவித்தனர்.

இதைத்தவிர இவர்களுக்கு வருடத்துக்கு 3 முறை பயணச் சலுகை வழங்கப்படுகிறது.  அந்த பயண சலுகைகளில் இரண்டை விட்டுக் கொடுத்து இனி வருடத்துக்கு ஒரே முறை மட்டுமே பயணச் சலுகை பெற உள்ளதாகவும் இருவரும் அறிவித்துள்ளனர்.