சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

முதலில் இன்று மாலை 5 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் 2 மணி நேரம் கூடுதலாக மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதனால், இரவு 7 மணி உடன் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.  பிரச்சாரம் ஓய்ந்ததை தொடர்ந்து தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவையில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.