நாம் நடைபயிற்சிக்கு செல்ல ஒரு துணை இருந்தால் கதைபேசிக் கொண்டே போகலாம் என நினைப்போம். சிலர் தமது வளர்ப்புப் பிராணியுடம் செல்வதை விரும்புவர். அத்தகையோர், பெரும்பாலும் நாயைக் கூட்டிகொண்டு செல்வதைப்  பார்த்திருப்போம்.
கீழே உள்ள காணொளியில் ஒரு வயதான ஜப்பானியர் யாரை அழைத்துக் கொண்டு செல்கின்றார் என நீங்களேப் பாருங்கள்.
 
https://youtu.be/FOKrN6GQOVc
ஆம். அவர் ஒரு வயதான, மெதுவாய் நடக்கும் ஒரு  ஆமையைத்தான் அழைத்து செல்கின்றார். ஜப்பான் தலைநகர்  டோக்யோவில் உள்ள  சுகிஷிமாவில்  திரு. மித்தானி என்பவரால்   வளர்க்கப்படும் 20 வயதான ஆமையின் பெயர் போன்=சான். அது தான்  முட்டைகோஸை விரும்பி உண்பேன்.  என்னை  குழந்தைகள் மிகவும் பிடிக்கும். எனக்கு நடந்து செல்வது மிகவும் ப்டீக்கும். என்னை வலர்ப்பவர் தினமும் என்னை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வார்.  சாலைகளில் நாய்கள் என்னைப்பார்த்து குரைக்கும்.”என கூறுவது போல்  காணொளி உள்ளது.