ஈராக்கில் கார் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி

Must read

பாக்தாத்:
ராக் தலைநகரான  பாக்தாத் அருகே உள்ள  ரஷிதியா  மாவட்டத்தில்  இன்று  பயங்கரமாக குண்டு வெடித்தது இதில்  9  பேர்  இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
iraq
இன்று காலை குண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று பயங்கரமாக மக்கள் அதிகமாக கூடும் மார்கெட் பகுதியில் வெடித்து சிதறியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். 32க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு  எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
iraq-2
இது ஐ.எஸ். தீவிரவாதிகளின்  வேலையாக இருக்கும் என்று ஈராக் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இதேபோல நடந்த கார் குண்டு வெடிப்பில் 292 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article