மதுரை: தனக்கு கிடைத்த தங்க காசு பரிசை சிங்கப்பெண்ணுக்கு கொடுத்து, மாடு அவிழ்த்து விட்ட வீரமங்கையை மகிழ்ச்சிப்படுத்திய மதுரை வீரன் தொடர்பான நெகிழ்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரை அவனியாபுரத்தில் பொங்கலன்று புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிகட்டு போட்டியில் 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற னர். போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும், வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, டிராக்டர், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள், தங்கக்காசுகள் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், மாடை பிடித்த வீரர் ஒருவருக்கு கிடைத்த தங்கக்காசை, அந்த மாடை அவிழ்த்து விட்டது ஒரு சிறுமி என்பதை பார்த்த அந்த மாடுபிடி வீரர் இந்த சிங்கப்பெண்ணை கவுரவுக்கும் வகையில், தனக்கு பரிசாக கிடைத்த தங்கக்காசு உள்பட பரிசுகளை அந்த சிங்கப்பெண்ணுக்கு வழங்கினார். இந்த சம்பவம் அங்கிருந்தோரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாசத்துக்கும், வீரத்துக்கும் பேர்போன மதுரை ஜல்லிகிகட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைலாகி வருகிறது
இதுகுறித்து கூறிய அந்த மாடுபிடி வீரர், தான் ஏற்கனவே 2020ல் முதல் பரிசு பெற்றதாகவும், 2021ல் இரண்டாவது பரிசு பெற்றுள்ளேன், முதல்வர் ஸ்டாலினிடமும் ரூ.1லட்சம் பரிசு பெற்றுள்ளேன் என்று கூறியதுடன், ராகுல்காந்தியிடம் இரு சக்கர வாகனம் பெற்றுள்ளேன் என்றதுடன், தான் இதுவரை பைக், தங்கக்காசு என ஏராளமான பரிசுகளை வென்றுள்ளேன் என்றும், இந்த முறையில் 7 மாடுகளை பிடித்து பரிசு பெற்றுள்ளேன் என்றார்.
இந்த ஆண்டு போட்டியின்போது, மாடு பிடித்துவிட்டு தங்கக்காசு பெற்றபோதுதான், அந்த மாட்டை அவிழ்த்து ஒரு சிறு பெண் என்பது தெரிய வந்தது. அ ந்த பொண்ணு மாடு அவிழ்த்தது தெரியாது..’ எனக்கு கஷ்டமாக இருந்தது. எனக்கும் ஒரு பெண்ணுக்கு இருக்கு. இருந்தாலும் அந்த பெண்ணு மாடு அவிழ்த்தது எனக்கு கஷ்டமாக இருந்தது. அதனால், எனக்கு கிடைத்த தங்க காசு உள்பட அனைத்தை பரிசுகளையும் அந்த சிங்கப்பெண்ணுக்கு கொடுத்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மாடுபிடி வீரரின் இந்த சம்பவம் அங்கிருந்தோர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி: வீடியோ, போட்டோ உதவி: நியூஸ் தமிழ்