சென்னை: நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட் ஆகியவற்றையும் கொண்டு செல்ல வேண்டும் என சென்னை மாநகரர்ட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர், பொதுமக்களின்  வசதிக்காக நடமாடும் காய்கனி விற்பனையாளர்களின் மொபைல் போன்கள் மண்டலம் வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய காய்கறி மற்றும் பழங்களை தள்ளுவண்டிகள் மற்றும் வாகனங்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் வாகனங்களின் விவரங்களை bit.ly/3hThDkF என்ற இணையதளத்தில் காணலாம்.

காய்கறி மற்றும் பழங்களை தள்ளுவண்டிகள் மற்றும் மக்களின் தேவைகள் கருதி வியாபாரிகள் நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட் ஆகியவற்றையும் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்து உள்ளார்.