சென்னை:
ல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையில் வெளியிட்ட அறிவிப்பு:

1. பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 55,000 பணியிடங்கள் நடப்பு நிதியாண்டில் நிரப்பப்படும்

2. கலைஞர் நூற்றாண்டு பூங்கா 6.09 ஏக்கரில் ரூ. சென்னை கதீட்ரல் சாலையில் 25 கோடி ரூபாய்

3. Ola, Uber, Swiggy மற்றும் Zomato போன்ற நிறுவனங்களின் ஊழியர்களுக்காக தனி நல வாரியம் அமைக்கப்படும்.

4. ரூ. 7 கோடியில் 10000 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம்.