கவர்னர் மாளிகையில் எடப்பாடி இன்று மாலை பதவியேற்பு!

Must read

சென்னை,

ன்று காலை எடப்பாடி பழனிச்சாமி குழுவினர் ஆளுநரை சந்தித்தனர். அப்போது, ஆட்சி அமைக்க எடப்பாடிக்கு ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.

ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தககவலையெடுத்து கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக எம்பி தம்பிதுரை தலைமையில் அங்கு தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்வு விழா நடக்க கவர்னர் மாளிகையில் எளியமுறையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என தெரிகிறது.

எடப்பாடியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்திருப்பதை அறிந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.

தற்போதைய காபந்து முதல்வரான ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நிலவி வந்த அசாதாரண அரசியல் சூழல், எடப்பாடி ஆட்சி அமைப்பபதன் மூலம் முடிவுக்கு வருகிறது.

More articles

Latest article