சென்னை:  கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், செயற்கை உடல் உறுப்பு நிலையம் உருவாக்கிய கோவை அரசு மருத்துவமனைக்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில்,  கொரோனா சூழலிலும் இரண்டே மாதங்களில் “செயற்கை உடல் உறுப்பு நிலையத்தை” உருவாக்கி பிரத்யேக வார்டுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு உளமார்ந்த பாராட்டுகள்!
 முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் இவ்வுயர்தர சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.