சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் 5 முனைபோட்டி  நிலவி வருகிறது. ஆட்சிiயை  தக்க வைத்துக்கொள்ள திமுக தலைமை தேர்தல் பணிகளை முன்னெடுதது வருகிறது. அதற்கு டஃப் கொடுக்கும் வகையில், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி களமிறங்கி உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, பாஜக, பாமக அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளனர்.  இதற்காக .பாஜக மேலிடப் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகம் சென்றனர்.

அங்கு எடப்பாடி முன்னிலையில்,  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அதன்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமாக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இன்று இரவுக்குள் ஒப்பந்தம் கையொப்பமாகும் எனத் தெரிகின்றது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (மார்ச் 25)  மாலை 4 மணிக்கு  தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாளை மாலை தரிசனம் செய்துவிட்டு, அந்த தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.

[youtube-feed feed=1]