சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஏ.சி.சண்முகத்தின் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கவுரவடாக்டர் பட்டம் வழங்கி தனது நன்றிக்கடனை செலுத்த உள்ளது.

சென்னையிலுள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாகஅறிவித்து உள்ளது.

அதிமுகவின் கூட்டணிக்கட்சிகளில் ஒன்றான புதிய நீதிக் கட்சியின் நிறுவனரும் தலைவருமான ஏ.சி.சண்முகம்தான் இந்தக் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

இந்த கல்வி நிறுவனம் சார்பில் ஏற்கனவே  கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு கவுரவ டாக்டர் பட்டமும், அதே போல 2017 ஆம் ஆண்டு நடிகர் விஜயகுமாருக்கும் கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கி கவுரவித்து உள்ளது.

தற்போது தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது. இதற்கான விழா வரும் 20ந்தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.