சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலன் குறித்து விசாரிக்க , அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அதே வேளையில், சசிகலாவும்  அப்போலோ மருத்துவமனை வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீப காலமாக மீண்டும் அரசியலுக்கு வரப்போவதாக ஆடியோ வெளியிட்டு,அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் மறைந்த ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா.மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக கலகலத்துப்போய் உள்ளது.
இந்த நிலையில் உடல்நலப் பாதிப்பு காரணமாக, அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன்  சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து, அவரை நேரில் சந்தித்து விசாரிக்க பெற்று வரும் சந்திக்க சசிகலா இன்று மதியம் 12.45 மணி அளவில் திடீரென வருகை தந்தார். அவரது காரில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது. ஆஸ்பத்திரிக்கு சென்ற சசிகலா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுசூதனனின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, மதுசூதனனின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி ஆஸ்பத்திரிக்குள் இருக்கும் போது சசிகலாவின் கார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நுழைந்தது. சசிகலா, மதுசூதனனை சந்திக்க சென்றபோது எடப்பாடி பழனிசாமி ஆஸ்பத்திரியில் இல்லை. அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.