சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக சென்னையில்  40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் காஞ்சிபுரத்திலும் 21 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில் ஒரு வீட்டுக்கு அதிகாரிகள் சில் வைத்தனர்.

வருமான வரி முறைகேடு தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்பட  பல திரையுலகினர் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து  சட்டவிரோத பணப்பரிமாற்றப் புகார் தொடர்பாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்பட  47 இடங் களில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐஎஃப்ஸ் கம்பெனி, நாடு முழுவதும் கிளைகளை வைத்துள்ளது. இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும், காஞ்சிபுரத்தில் உள்ள6 இடங்களிள் உள்பட   21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் 8000 மாதம் தருவதாக கூறி பல பேரிடம் முதலீடு பெற்று மோசடி செய்தது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு லட்சம் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுத்த IFS நிதி நிறுவனம் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகினிற்னர். முக்கிய நிறுவனங்கள் உள்பட காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வந்தது. காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகாமையில் உள்ள மின்மினி சரவணன் என்பவர் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஐந்து பேர் கொண்ட குழு காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆருத்ராவை மோசடி தொடர்ந்து மீண்டும் ஒரு நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு சோதனை செய்து வருவதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே உள்ள வீட்டை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சில் வைத்தனர் சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.