டில்லி

நேஷனல் ஹெரால்ட் அலுவலகக் கட்டிடத்துக்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல்  பிரதமரான ஜவகர்லால் நேரு சுதந்திரத்துக்கு முன்பு நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கி நடத்தி வந்தார்.    காங்கிரஸ் கட்சி இந்த பத்திரிகை மேம்பாட்டுக்கு ரூ,90 கோடி அளித்த கடனை அந்நிறுவனம் திரும்ப அளிக்கவில்லை.   இதையொட்டி அந்த நிறுவனத்தைக் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் யங் இந்தியா நிறுவனம் கைப்பற்றியது.

இதையொட்டி நேஷனல் ஹெரால்டின் ரூ.200 கோடி சொத்ஹ்டுக்களை யங் இந்தியா அபகரித்ததாக பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி வழக்கு தொடர்ந்தார்.   இந்த சட்டவிரோத பரிவர்த்தனையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.   இதையொட்டி அமலாக்கத்துறையினர் ராகுல் மற்றும் சோனியாவிடம் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகிறது.

நேற்று அமலாக்கத்துறையினர் நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்துக்குள் நுழந்து சோதனை நடத்தி உள்ளனர்.   இந்த சோதனை முடிவில் நேஷனல் ஹெரால்ட் அலுவலகக் கட்டிடத்துக்குச் சீல் வைத்துள்ளனர்.   இதே கட்டிடத்தில் உள்ள யங் இந்தியா அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.   மேலும் முன்னெச்சரிக்கையாக சோனியா மற்றும் ராகுலாகியோர் இல்லத்தின் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.