சென்னை

இன்று அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.

 

கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். உச்சநீதிமன்றம் அவரது கைது சட்டப்படியானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது.

இந்த விசாரணைக்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் இந்த மனுவிற்கு பதிலளிக்கக்கோரி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.

இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த சோதனை சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்பட 8 இடங்களில் நடைபெற்று வருகிறது. அதாவது செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு உள்பட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.