சென்னை: சென்னையில் பல்வேறு கிளைகளைக்கொண்டுள்ள என்ஏசி நகைக் கடையின் ரூ .7 கோடி மதிப்புள்ள அசையாக சொத்துக்களை கருப்பு பணச் சட்டத்தின்படி அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
என்ஏசி ஜுவல்லர்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ .7 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை பண மோசடி தடுப்பு சட்டம் 2002 (பி.எம்.எல்.ஏ) இன் கீழ் பறிமுதல் செய்துள்ளதாக சென்னை அமலாக்க இயக்குநரகம் அறிவித்து உள்ளது.
ஆர்.ஏ. டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சில நிறுவனங்களுக்கு எதிராக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து குற்றவியல் கிளை, சூரத், ஒரு புகாரின் அடிப்படையில் கருப்பு பண மோசடி சட்டத்தின்கீழ் விசாரணை தொடங்கப்பட்டது. அதில், இறக்குமதி என்ற போர்வையில் சட்டவிரோத பணப் பறிமாற்றம் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, கருப்புபண மோசடி காரணமாக சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின்படி, அஃப்ரோஸ் முகமது ஹசன்பட்டா, மதன்லால் ஜெயின், மணீஷ் ஷா, ராகேஷ் கோத்தாரி மற்றும் ஜெயேஷ் தேசாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 34.29 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
இதில் என்ஏசி ஜூவல்லரி ஆனந்த பத்மநாபனுக்கு சொந்தமான, தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் 20,292 சதுர அடியில் அமைந்துள்ள என்ஏசி ஜூவல்லரி என்ற அசையா சொத்தும் அடங்கும். தி.நகரில் உள்ள என்ஏசி ஜூவல்லரி, 20 ஆயிரத்து 292 சதுர அடியில் அமைந்துள்ளது. 4 தளங்களைக் கொண்ட இந்த சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியாகும்.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிககையில், போலி பில் தயாரித்து மோசடி செய்தது தொடர்பாக ஆர்.ஏ.டிஸ்டிபியூட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் மீது சூரத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளை சிபிஐயில் உள்ள குற்றப்பிரிவில் புகார் அளித்தது.
இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை 9 நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வு செய்யப்பட்ட போது கிடைத்த ஆதாரங்களை கொண்டு விசாரணை செய்ததில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 3 நிறுவனங்கள் மற்றும் ஹாங்காங்கில் உள்ள 15 நிறுவனங்கள் பெயரில் போலி பில்கள் தயாரித்து மிகப் பெரிய தொகை மோசடி செய்து இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த மோசடியில், வந்தனா அண்ட் கோ, நேச்சுரல் டிரேடிங் கம்பெனி, மாருதி டிரேடிங் உள்ளிட்ட 469 பிற நிறுவனங்கள் ஆக்சிஸ் வங்கியில் கணக்கு வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இதில் குறிப்பிட்ட 8 நிறுவனங்களிலிருந்து பணி பறிமாற்றம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிறுவனங்கள் பல்வேறு காசோலை மூலம் சுமார் 2,700 நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றுள்ளது தெரியவந்தது.
இந்த மோசடியில் அப்ரோஸ் முகமது ஹசன் பட்டா, மதன்லால் ஜெயின், பிலால் ஹாரூன் கிலானி, ஜெயேஷ் தேசாய், ராகேஷ் கோத்தாரி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் போலி இயக்குனர்கள் மற்றும் பல போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர்.
விசாரணையில் மதன்லால் ஜெயின் முக்கிய சதிகாரர் ஆவார், அவர் வெளிநாட்டு பணம் அனுப்புதல் சட்டவிரோத பரிவர்த்தனைகளில் கமிஷனைப் பெற்றார். சம்பாதித்த கமிஷனின் ஒரு பகுதி என்ஏசி ஜுவல்லர்ஸ் (பி) லிமிடெட் வங்கிக் கணக்கில் ரூ .7 கோடிக்கு மாற்றப்பட்டது.
இதில் முக்கிய நபரான மதன்லால் ஜெயின், போலி பில்கள் மூலம் சட்டவிரோத முறையில் பணப் பரிமாற்றம் செய்து அதற்கு கமிஷன் பெற்றுள்ளார். இவர் தான் சம்பாதித்த தொகையில் ஒரு பகுதி அனந்த பத்மநாபனின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஏசி ஜூவல்லர்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது தெரியவந்தது.
ஆனால், இந்த முறைகேட்டை மறைக்கும் வகையில், நேச்சுரல் டிரேடிங் அண்ட் கோ என்ற கம்பெனி என்ஏசி ஜூவல்லரியிடம் இருந்து வைர நகையை வாங்கியதை போன்று போலி பில்களை மதன்லால் ஜெயின் தயாரித்துள்ளது தெரிய வந்தது. விசாரணையில், நேச்சுரல் டிரேடிங் கம்பெனி மதன்லால் ஜெயின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் என்பதும் கண்டறியப்பட்து. இதையடுத்தே என்ஏசி ஜூவல்லரியின் ரூ.7 கோடி மதிப்பிலான அசையாக சொத்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.