டில்லி

பாரமவுண்ட் விமான நிறுவன அதிபர் தியாகராஜனுடைய ரூ. 28.19 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று பறிமுதல் செய்தது.

பாரமவுண்ட் விமான நிறுவனம் மதுரையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.   இதன் நிறுவனர் தியாகராஜன் ஆவார்.  இந்த நிறுவனம் 5 பொது துறை வங்கிகளிடம் இருந்து ரூ. 441.11 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது.

இதை ஒட்டி அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ தனித்தனியே விசாரணை நடத்தியது.    தற்போது  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே இந்த நிறுவனத்தின் மீது இரு பண மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது.   இதைத் தவிர மேலும் ஐந்து வழக்குகள் விசாரணையின் கீழ் உள்ளது.

இந்நிலையில் அமலாக்கத்துறை பாரமவுண்ட் விமான நிறுவன உரிமையாளர் தியாகராஜன் மற்றும் நிறுவனத்துக்கு சொந்தமான 28.19 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறி முதல் செய்துள்ளது.  பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்துக்கள் மதுரை மற்றும் தென்காசி பகுதிகளில் உள்ளவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.