டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ல் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய மார்ச் 20ந்தேதி வரை டில்லி உயர்நீதி மன்றம் நேற்று தடை விதித்தது.

இந்நிலையில், தடையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கார்த்தி சிதம்பரம் தரப்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் இன்று கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

என்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ல் கைது செய்யப்பட்டுள்ள  கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்து விசாரிக்க டில்லி உயர்நீதி மன்றத்தில் கோரியிருந்தது.

இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய வரும் 20ந்தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.