2047ம் ஆண்டு இந்தியாவை வல்லரசு ஆக்குவது எப்படி அதற்கு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது எப்படி என்பது குறித்து கருத்து கேட்கும் வகையில் ‘விக்சித் பாரத்’ விளம்பரங்கள் வாட்ஸப் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது.

பாஜக மற்றும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி குறித்த பெருமைகள் அடங்கிய கடிதத்துடன் மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும் இந்த வாட்ஸப் தகவல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 16-3-2024 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய குடிமக்களுக்கு ‘WhatsApp’ மூலம் தொடர்ந்து விக்சித் பாரத் குறித்த தகவல் அனுப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதனையடுத்து இதுபோன்ற குறுஞ்செய்திகள் வெளியிடப்படாமல் தடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.