சென்னை: தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து,  தமிழ்நாடு அமைச்சர்கள் 10 பேரின் இலாகாக்கள் மாற்றம் மற்றும் சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன.

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக பெரியாமியிடம் இருந்த புள்ளியியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அமைச்சர் முத்துசாமி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிதுறை மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சிஎம்டிஏ துறை (Chennai Metropolitan Development Authority) கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், சுற்றுச்சூழல் துறையை தொடர்ந்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் காந்தி கைத்தறி மற்றும் துணிநூல் துறையை மட்டுமே கவனிப்பார்.