சென்னை

னைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஒ பி எஸ் அணிக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  எனவே அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமைத் தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் (ஆட்சியர்கள்) ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எனவே நாளை (ஆகஸ்டு 1ம் தேதி) காலை 11.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட உள்ளது.   இந்த கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.  அதாவது திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  அதிமுகவுக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்குத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி அணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆகவே ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  எனவே தேர்தல்  ஆணையத்தின் நடவடிக்கைக்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, எங்கள் அணியினரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி இதை ஏற்றுக் கொண்டுள்ளார்.  நாளை நடக்கும் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் பங்கேற்கக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பில் தற்போதைய எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.