கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் வீரபாண்டி. தேனி மாவட்டம்.
கண்,பார்வை கோளாறுகள் நிவர்த்தி ஆகும் அழகிய திருத்தலம்.
மூலவர் :கண்ணீஸ்வரமுடையார்.
அன்னை: அறம்வளர்த்த நாயகி/கௌமாரியம்மன்
தீர்த்தம்: முல்லையாறு.
தலசிறப்பு :: மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நோய்களை தீர்க்கும் மூலிகை சக்தி கொண்ட முல்லையாற்றின் கரையில் அமைந்துள்ள அழகான ஆலயம்.
கண் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கும் சக்தியுள்ள தலம்.
பாண்டிய நாட்டை ஆண்டுவந்த வீரபாண்டிய மன்னனுக்கு முன்வினைப்பயனால் இடையில்
பார்வை பறிபோனது. பார்வையோடு இருந்த அவனுக்கு இடையில் பார்வை பறிபோனது மிகுந்த மனவேதனையை தந்தது. அவன் எம்பெருமான் சிவனை நினைத்து மனமுருக வேண்டி வந்தான்.
அவனின் வேண்டுதலுக்கு மனமிறங்கிய இறைவன் கனவில் தோன்றி முல்லைப்பெரியாறு ஆற்றின் அருகே உள்ள கௌமாரி அம்மனை வழிபட அறிவுறுத்தினார்.
அதன்படி அம்மனை வணங்கிட ஒரு கண்ணில் பார்வை கிடைத்தது.அம்மன் அவனிடம் தான்
தினமும் வணங்கும் சிவலிங்கத்தை வழிபட கூறினாள்.அதன்படி பக்தியோடு சிவலிங்க வழிபாடு செய்து வந்தான்.பெரியவர்களின் அறிவுரைப்படி இறைவனுக்கு கோவில் ஒன்றை எழுப்பினான்.
அவனின் அடுத்த கண்ணிலும் பார்வை கிடைத்தது.
கண்களுக்கு பார்வை ஒளி தந்ததால் இறைவனுக்கு கண்ணீஸ்வரமுடையார் என்ற பெயர் ஏற்பட்டது .
புகழ்பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள புண்ணியத்தலம்.