மதுரையில் பெய்த கனமழை: 4 பேர் உயிரிழப்பு

Must read

மதுரை:
துரையில் பெய்த கனமழையில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

மதுரையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறின.

இந்நிலையில், மதுரை ஆண்டாள்புரம் மேற்கு தெரு பகுதியில், கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த முருகன், ஜெகதீசன் ஆகியோா் மீது மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தனர்.

மதுரை ரெயில்வே நிலையம் எதிரே உள்ள மேல பெருமாள் மேஸ்திரி வீதியில், மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய வயதான தம்பதியினர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More articles

Latest article