மோடிஅரசின் உத்தரவா? ரஃபேல் ஊழல் புத்தகங்களை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை: தேர்தல்ஆணையர் சத்தியபிரதா சாஹு தகவல்

Must read

சென்னை:

ஃபேல் ஊழல் புத்தகங்களை பறிமுதல் செய்யவோ, புத்தக வெளியீட்டு விழாவை தடை செய்யவோ,  தேர்தல் ஆணையம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்ற தமிழக தேர்தல்ஆணையர் சத்தியபிரதா சாஹு கூறி உள்ளார்.

இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது. மோடி அரசின் தூண்டுதல் காரணமாக தமிழக அரசின் ஏவல்துறையாக செயல்பட்டு வரும்  காவல்துறையினரே நடவடிக்கை எடுத்தனரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ன்று மாலை  வெளியிடப்பட இருந்த  “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்”  என்ற புத்தகம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக கூறி, விழாவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், புத்தகங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து சென்றனர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, இது ஜனநாயக விரோத செயல் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

புத்த வெளியீட்டு விழா தடை செய்யப்பட்டது குறித்து, கருத்து தெரிவித்த இந்து ராம், இது கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்றும்,  புத்தகங்களை பறிமுதல் செய்தது ஜனநாயக விரோத, சட்டவிரோத நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், ரஃபேல் புத்தகம் பறிமுதல் செய்ய இந்திய தேர்தல் தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் உடனடியாக அறிக்கை அளிக்க கேட்டுள்ளோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் ஆணையம் உத்தரவிடாத நிலையில், புத்தகத்தை பறிமுதல் செய்யவும், புத்த வெளியீட்டு விழாவை ரத்து செய்யவும் உத்தரவிட்டது யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

மோடி அரசின் கண்ணசைவுக்கு ஏற்ப நடனமாடி வரும் எடப்பாடி அரசுதான், அரசின் ஏவல்துறை யாக செயல்பட்டு வரும் காவல்துறையினரை வைத்து, புத்தகத்தை பறிமுதல் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article