சென்னை: தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்கான மின்சார ’ஷட் டவுன்’ நேரம் குறைக்கப்படுவதாகவும், அதன்படி அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக்ததில் கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தற்போது கோடை வெயிலும் கொளுத்தி வருகிறது. லாக்டவுன் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர். இந்த நிலையில்வ மின்சார பராமரிப்பு என்ற பெயரில் அவ்வப்போது, மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதால் மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை போன்ற நகரப்பகுதிகளில் மக்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாகின்றனர்.
இநத் நிலையில் பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும் நேரம் குறைக்கப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை நிறுத்தம் செய்வதற்கு பதில்,. இனிமேல் பகல் 12 மணிக்குள் ஏதாவது இரண்டு மணிநேரம் பராமரிப்புப் பணிக்கு மின்சாரம் நிறுத்தப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை உடனே அமலுக்கு வருவதாகவும் அறிவித்து உள்ளது.