மின்வாரிய பணி தொடர்பான அனைத்து அறிவிப்பாணைகளும் ரத்து! தமிழ்நாடு மின்சார வாரியம் திடீர் அறிவிப்பு

Must read

சென்னை; மின்வாரிய பணி  தொடர்பானஅனைத்து அறிவிப்பாணைகளும் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சமீபத்தில், 5,318 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது அது ரத்து செய்யப்படுவதாக  அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பானை தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் கொரோனா தொற்று, சட்டப்பேரவை தேர்தல் காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் சமீபத்தில் அனைத்து அரசு நிறுவனங்களின் ஆள்சேர்ப்பையும் டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மின்சாரவாரிய ஆள்சேர்ப்பு அறிவிப்பாணைகள் ரத்து செய்யப்படுவதாகவும், கணினி வழி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என்றும், விண்ணப்பித்தவர்களுக்கான கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article