திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிகள், குளங்கள், ஆறுகள் அனைத்தும் நிரம்பி தென் மாவட்டமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு இந்த மாவட்ட மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

18-12-2023 முதல் 30-12-2023 வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய மின்நுகர்வோர் அபராதம் இல்லாமல் ஜனவரி 2ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 18-12-2023 அன்று அபராதத்துடன் மின்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அவர்கள் செலுத்திய அபராதத்தொகை அடுத்த மாத மின்கட்டணத்தில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.