சனியின் கடுமையில் இருந்து விடுபட இதைச் செய்யுங்கள்!

 

சனி பகவானின் கடுமையான பார்வையில் பட்டு அல்லல் பட்டுவருகிறீர்களா… இதோ அதற்கு எளிய பரிகாரம்.

சனிக்கிழமை அன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்து விட்டு, விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றி விட்டு அந்த அரிசியை விநாயகரை சுற்றிப் போட்டால்,அதை எறும்புகள் எடுத்துச் செல்லும். அப்படி அவை எடுத்துச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய் விடும்.

வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால், இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழை காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும். இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை எறும்புக் கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்து போய் விடும்.

இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாக போட வேண்டும். இப்படிச் செய்தால் இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.

– எஸ்.சம்பந்தமூர்த்தி

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி,சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்


English Summary
Easy way to get rid of Saneeswara's eye