சென்னை: கிழக்கு திசை காற்று மாறுபாடு காரணமாக இன்றுமுதல் 2 நாள் மழை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 15ந்தேதி வரை குளிர் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதனப்டி, இன்னும் 8 தினங்கள் வரை இரவில் குளிர் நீடிக்கும்- அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும் லேசான மழைக்கு வாயப்பு இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 7ந்தேதி, 8ந்தேதி கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றம், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல்பகுதிகளில் வடகிழக்கு, வடக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. மினவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
9ந்தேதி முதல் 11ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னையில், அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 24-25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஜனவரி மத்தி வரை அதாவது 15-ந்தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதே நேரத்தில் மழை முடிவுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.