காத்மாண்டு:
ந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் முறையே 4.7, 5.3 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் குறித்து அந்த மையம் கூறுகையில், ‛‛பக்லுங் மாவட்டம் ஆதிகாரி சவுர் பகுதியில் அதிகாலை 1.23 மணிக்கு முதலாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற அளவில் பதிவானது. அதன்பிறகு பக்லுங் மாவட்டம் குங்காவை அதிகாலை 2.07 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டரில் 5.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது” என தெரிவித்துள்ளது.