மாஸ்கோ: ரஷியாவின் கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பு விதித்த மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கான எண்ணெய் உற்பத்தி குறைக்கப் படும் வகையில்,  ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்ய அதிபர் புடின் தடை விதித்துள்ளார்.  இந்த தடை, பிப்ரவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்றும் , ஜூலை 1, 2023 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடுகள் எண்ணெய்க்காக ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளன. பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே எரிசக்தி பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன ரஷியாவின் எண்ணெய்க்கு விலை வரம்பு விதித்த மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கான எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட கூடும் என ரஸ்ய அதிபர் புடின் எச்சரிக்கை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஒருமித்து, ரஸ்யாவிடம் இருந்து விலைக்கு வாங்கப்படும் இந்த விலைக்கு கூடுதலாக எண்ணெய் விற்கப்பட்டால், ரஸ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கான காப்பீடு, நிதி மற்றும் பிற சேவைகள் தடை செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய புதினும்,  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ரஸ்ய அதிபர் புடின்,  மேற்கத்திய நாடுகளின் முட்டாள்தனம் வாய்ந்த முன்மொழிவான, விலை உச்சவரம்பு நிர்ணயத்திற்கு ஆதரவளிப்பது என்ற முடிவை எடுக்கும் நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை கிடையாது என்றும், தேவைப்பட்டால் அதுபோன்ற நாடுகளுக்கான எண்ணெய் உற்பத்தியை நாங்கள் குறைப்போம் என கூறினார். அதேவேளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள எண்ணெய்க்கான விலை உச்சவரம்பு ஆனது தற்போது, ரஷியாவின் எண்ணெய் விற்பனை விலையுடன் ஒத்து போகின்ற அளவிலேயே உள்ளன.

இந்த நிலையில், ரஷியாவின் கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பு விதித்த மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கான எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும் வகையில்,  ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்ய அதிபர் புடின் தடை விதித்துள்ளார்.  இந்த தடை, பிப்ரவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்றும் , ஜூலை 1, 2023 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவால் ஐரோப்பாவில் கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகும்.