வேலூர்; வேலூரில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது. இது 3.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட ஆட்சியல், அதிகாலை 4.17 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. தரைமட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 3.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றார.
இந்த நில அதிர்வானது, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, சென்னாம்பேட்டை, பெரியபேட்டை, பழைய வாணியம்பாடி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.